“ஒரு டீ குடுங்க” என கடைக்காரரிடம் கேட்டு அவர் இரண்டரை இஞ்ச் குவளையில் நீட்டும் தேனீரை சுவைத்துக் குடிக்கும் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் கிரீன் டீ என அழைக்கப்படும் பச்சைத் தேநீர் பற்றி ? நிமிடத்துக்கு பத்து என விளம்பரங்களில் தலைகாட்டும் தேநீர்களின் பெயர்களைக் கேட்டுக் கேட்டுக் குழம்பிப் போயிருக்கும் நம்மில் பலருக்கும் தெரியாமலே போய்விட்ட ஒன்று தான் இந்த பச்சைத் தேநீர். இந்தத் தேனீரில் மகத்துவமே இருக்கிறது என ஆராய்ச்சிகள் வியந்து பேசுகின்றன என்பது தான் இந்தத் தேனீரைப் பற்றி நாம் அறிந்து கொள்வது நல்லது என நானும் நினைப்பதற்குக் காரணம். இந்தத் தேனீரை அருந்தி வந்தால் உடல் பருமனாவதிலிருந்து தப்பலாம் எனவும், இந்த கிரீன் டீ உடலிலுள்ள இன்சுலின் சுரக்கும் தன்மையை வலிமைப்படுத்தும் எனவும் யூகேவின் பர்மிங்காம் பல்கலைக்கழகம் பச்சைத் தேநீர் பற்றி வெளியிட்டிருக்கும் ஆய்வு முடிவிலிருந்தே துவங்குகிறேன். சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தேநீர் அருந்தத் துவங்கி விட்ட சீனாவில் தான் இந்த பச்சைத் தேனீரும் முதலில் பயன்படுத்தப்பட்டு வந்தது என்பதே பெரும்பாலானோரால் ஒத்துக் கொள்ளப்பட்ட பச